ஆல் ( Ficus benghalensis L .; Moraceae )
ஆல் ( Ficus benghalensis L .; Moraceae ) மாற்றடுக்கில் அமைந்த அகன்ற இலைகளையுடைய பெருமரம் . கிளைகளிலிருந்து விழுதுகள் வளர்ந்து ஊன்றி மரத்தைத் தாங்கும் அமைப்புடையது . நிழல் தரும் மரமாகத் தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது . சாறு பால் வடிவாக இருக்கும் . இலை , பூ , பழம் , விதை , பால் , பட்டை , விழுது ஆகியவை மருத்துவப் பயனுடையவை . விழுது , பட்டை , இலை ஆகியவை உடல் பலம் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் செயற்படும் . 1 . ஆலமரப்பட்டை , வேர்ப்பட்டை , மொட்டு , கொழுந்து , பழம் , விழுது வகைக்கு 40 கிராம் 2 லிட்டர் நீரில் சிதைத்துப் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி காலை மாலையாக ஒவ்வொரு நாளும் குடித்து வர மேக எரிச்சல் , மேகப்புண் , மேக ஒழுக்கு ( white discharge ) தீரும் . 2. ஆலம் பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டுப் புளி , காரம் நீக்கி உண்ண ஒரு மண்டலத்தில் கொறுக்கு நீரும் . 3 . ஆலம் பாலை காலை , மாலை தடவி வர வாய்ரணம் , நாக்கு , உதடு ஆகியவற்றில் வெடிப்பு , கை , கால் வெடிப்பு , பல் ஆட்டம் ஆகியவை தீரும் . 4 . ஆலம் பட்டை , அத்திப்பட்டை , அவுரிவேர்ப்பட்டை ...