அம்மான் பச்சரிசி சித்திரப்பாலாடை ( Euphorbia hirta L .; Euphorbiaceae )

 அம்மான் பச்சரிசி சித்திரப்பாலாடை (  Euphorbia hirta L .; Euphorbiaceae ) 












ஈரமுள்ள இடங்களில் தானே வளரும் சிறுசெடி.எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன்கூடிய ஈட்டி வடிவ இலைகளையுடையது பாய்உள்ளவை . தமிழகத்தில் என்ன மாவட்டங்களிலும் வளர்கிறது . 

வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும் , மலமிளக்கியாகவும் . வெப்புத் தணிப்பானாகவும் , சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயற்படும் . 

1. இலையைச் சமைத்து உண்ண வரட்சி அகலும் . வாய் , நாக்கு , உதடு ஆகியவற்றில் வெடிப்பு , புண் தீரும் .

2 . தூதுவேளை இலையுடன் துவையல்செய்து சாப்பிடத் தாது , உடல் பலப்படும் .

 3. கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை , மதியம் , இரு வேளையும் எருமைத்தயிரில் உண்ண உடம்பு எரிச்சல் , நமைச்சல் , மேகரணம் , தாது இழப்பு தீரும் .

 4 . பூவுடன் 30 கிராம்அரைத்துக் கொட்டைப்பாக்களவு பாலில் கலந்து ஒருவாரம் கொடுக்கத் தாய்ப்பால் பெருகும் . 

5. பாலைத்தடவி வர நகச்சுற்று , முகப்பரு , பால்படுமறையும் . கால் ஆணி வலி குறையும் .

6. இலையை நெல்லிக்காயளவு நன்கு அரைத்துப் பசும்பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாள் கொடுக்கச் சிறுநீருடன் குருதிப்போக்கு , மலக்கட்டு , தீர்க்கடுப்பு , உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )