இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

படம்
 கிரந்தி நாயகம் (  Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae )  வெளிர் நிறமான முட்டை வடிவ வெகுருட்டல் மணமுள்ள இலைகளையும் வெண்ணிறப்பூக்களையும் உடைய மிகச் சிறு செடி . தமிழகமெங்கும் தரிசுகளிலும் புதர்க் காடுகளிலும் காணப்படுகிறது . இலைகளே மருத்துவப் பயனுடையவை . நுண்ணுயிர்க் கொல்லியாகச் செயற்படும் .  1. இலையை அரைத்து நகச்சுற்று , புண் , சிரங்கு ஆகியவற்றுக்குப் பூச குணமாகும் .  2 . ஐந்தாறு இலைகளை மென்று தின்னத் தேள் , பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும் . கடிவாவில் இலையை அரைத்துப் பூசலாம் .  3. இலையுடன் சமனெடை நாட்டுக் கல்தார் சேர்த்தரைத்து அடைதட்டிக் காய வைத்து வறட்டியினிடையே வைத்துப் புடமிட்டு எடுத்துப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல்வளி , பல்லாட்டம் , பல்லரணை , பல் சொத்தை , ஈறு வீக்கம் , ஈறு புண் , இரத்தக் கசிவு ஆகியவை நீரும் .  கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae ) மணப்பொருளாகப் பயன்படும் ஒரு பூ மலைப்பாங்கான இடங்களில் விளைகிறது . பலசரக்குக் கடைகளில் கிடைக்கும் . இசிவகற்றுதல் , வயிற்று வாயுவகற்றல் , செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்த...

காஞ்சொறி (Tragin involaucrats L .; Euphorbiaceae )

படம்
   காஞ்சொறி (Tragin involaucrats L .; Euphorbiaceae ) நீண்ட இதயவடிவ இலைகளையும் என்றும் பசுமையான பற்களும் கணையும் உடைய ஏறுகொடி ,, இவை உடம்பில் பட்ட இடத்தில் கடுமையான நமைச்சலுண்டாகும் . சாலை ஓரங்களிலும் ஆற்றங்கரைகளிலும் தன்னிச்சையாய் வளர்கிறது . வேர் மருத்துவப் பாறுடையது . உடல் தேற்றல் , வியர்வைப்பெருக்கல் கோழையகற்றல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது .  1 . அரை கிராம் வேர்ப்பொடியைக் கொதிக்கவைத்து வெள்ளாட்டுப்பாவில் கலந்து காலை மாலை சாப்பிட்டுவர இரைப்பிருமல் தீரும் .  2 . வேரைத் துளசிச் சாற்றில் அரைத்து மேற்பூச்சாகத் தடலிவர அரி கரப்பான் தீரும் .  3 , வேரை அரைத்து பற்றுப் போட நரம்புச் சிலந்திப்புழு வெளியேறும் .  4 . 30 கிராம் வேரைச் சிதைத்து அரையீட்டர் நீரிலிட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சிப் பாதிப்பாதியாய்க் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வர மூச்சுக் குழலழற்சி , காய்ச்சல் ஆகியவை தீரும் .  

கான வாழை ( Commelina benghalensis L .; Commelinacrae )

படம்
 கான வாழை (  Commelina benghalensis L .; Commelinacrae ) முட்டை ஈட்டி வடிவ இலைகளையுடைய அடிப்புறம் தரையோடு படர்ந்துள்ள சிறு செடி , மலர்கள் நீல நிறமானவை . சிறியவை . செடி முழுமையும் ைேரயாகப் பருப்பு கலந்து கூட்டுக் கறியாகச் மருத்துவப் பயனுடையது . சமைத்துண்ணலாம் .  1 . சமூலத்தைக் குடிநீராக்கிக் குடிக்க எளிய கரம் போகும் .  2 . சமூலத்துடன் மிளகு , சீரகம் சேர்த்து குடிநீராக்கிக் கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் காமும் நீங்கும் .  3 . சமூலத்துடன் அறுகம்புல் சமனாக ளமயாய் அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை மாலை பாலில் கொடுக்க இரத்தப் பேதி நிற்கும் . 4.சமூலம் அசோகுப் பட்டை அறுகு அமல் அரைத்துக் காலை , மதியம் , மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு தீரும்.  5.சமூலம் தூதுவேளைப் பூ முருங்கைப்பூ மி.லி. நீரில் போட்டுப் பாதியாபு காய்ச்சிப் பானும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ளத் தாது பலப்படும் .   6.இலையுடன் சமஅளவு கீழாநெள்ளி சமூலம் மையாய் அரைத்துத் தயிர் நெல்லிக்காயளவு காலை , மதியம் மானை கொடுக்க வெள்ளைப்போக்கு திரும் . 7. இலையை அரைத்துக் கட...

காட்டாமணக்கு ( Jatropha gossypifolia L ; Euphorbiaceae

படம்
  காட்டாமணக்கு (  Jatropha gossypifolia L ; Euphorbiaceae ) மாற்றடுக்கில் அமைந்த கைவடிவ இலைகளையும் , கருஞ்சிவப்பு நிறத் துளிர்களையும் , செந்திற மலர்களையும் உடைய குறுஞ்செடி . காய் முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் . விதை ஆமணக்கு விதைப் போன்று சிறிய வடிவில் இருக்கும் . ஆதாளை , எலியாமணக்கு என்ற பெயர்களாலும் வழங்கப்பெறும் . தமிழ்நாடெங்கும் தானே வளர்கிறது .  இலை , பால் , பட்டை எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை .  இலை தாய்ப்பாலையும் உமிழ்நீரையும் பெருக்கும் . பால் இரத்தக் கசிவை நிறுத்தவும் . சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படும் .  1 .இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும் . 2 விட்டர் நீரில் ஒரு பிடி இலையை போட்டு வேக வைத்து இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்ந்து மார்பில் ஒத்தடம் கொடுத்து , வெந்த இலைகளை வைத்துக் கட்டப் பால்கரப்பு : உண்டாகும் .  2.இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டக் கட்டிகள் கரையும் . வலி45 அடங்கும் .  3 .  இளங்குச்சியால் பல் துலக்கப் பல் வலி , பல் ஆட்டம் , இரத்தம் தீரும்  . 4. காட்டாமணக்கு எண்ணெயுடன் தேங்காய் எண்ண...

கறிமுள்ளி ( Solanum surrattense Burm.f .; Solanaceae )

படம்
   கறிமுள்ளி (  Solanum surrattense Burm.f .; Solanaceae )  சிறகாக உடைந்த முள் நிறைந்த இலைகளையும் , நீலநிறப் பூக்களையும் , வெள்ளை வரியுடைய உருண்டை வடிவக் காய்களையும் , மஞ்சள் நிறப் பழங்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி . இது பப்ரமுள்ளி , பாப்பார முள்ளி என்றப் பெயர்களாலும் குறிப்பிடப் பெறுகிறது . ( இதையே கண்டங்கத்தரியாகக் கொள்வோரும் உளர் . அவ்வாறு கொள்ளுதல் தவறாகும் ) தமிழகமெங்கும் தரிசுகளில் தானே வளர்கிறது . இலை , வேர் , காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை .  செடி முழுமையாக , சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் , காமம் பெருக்குதல் ஆகிய குணங்களையுடையது . வேர் கோழையகற்றுதல் , சிறுநீர் , வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல் , நாடி நடை மிகுந்து உடல் வெப்பத்தருதல் ஆகிய குணங்களையுடையது .  1 . இவைச்சாறு 15 மி.லி. சிறிது தேன் கலந்து 3 வேளையாகக் கொடுத்து வர இரைப்பிருமல் குணப்படும் . சளியகலும் .  2 . செடியை முழுமையுமாகப் பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்து சமன் கற்கண்டுப் பொடி கலந்து அரைத் தேக்கரண்டி 1 வேளையாகத் தேனில் கொள்ளக் கோழை , இருமல் , ஈளை ...

காக்கரட்டான் ( Clitoria ternatea L .; Papilionoideae )

படம்
 காக்கரட்டான் ( Clitoria ternatea L .; Papilionoideae )  அது கூட்டிலைகளையும் பளிச்சிடும் நீலநிற மலர்களையும் உடைய அழகிய ஏறு கொடி . தட்டையான காய்களையுடையது . இது கறுப்புக் காக்கரட்டான் ( கருவிளை ) எனப்படும் . வெள்ளைப்பூ உள்ள இளமும் உண்டு . வெள்ளைக் காக்கணம் ( வெள்விளை ) எனப்படும் . மாமூலி , காக்கணம் , காக்கட்டான் , சங்குப்பூ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது . வெள்ளைப்பூ காக்கணமே மருத்துவக் குணத்தில் சிறந்ததாகும் . தமிழகமெங்கும் வேலிகளில் இயற்கையாய் வளர்கிறது . இலை , வேர் , விதை ஆகியனவ மருத்துவப் பயனுடையவை .  சிறுநீர் பெருக்குதல் , குடற்பூச்சிக்கொல்நதல் , தாதுவெப்பு அகற்றுதல் , பேதி , வாத்தி , தும்மல் உண்டாக்குதல் ஆகிய குணங்களையுடையது . 1. காக்கரட்டான் பச்சை வேர் 40 கிராம் பிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 30 மி.லி : யாகக் காய்ச்சி / முடக்கு வீதம் 2 மணிக்கு ! தடவை 6 முறை சாப்பிடச்சுரம் , தலைவலி ஆகியவை தீரும் .   2 . வேரைப் பாலில் அவித்து , பாலில் அரைத்துச் சுண்டைக்காயளவு காலை மாயை பாலில் சாப்பிட மேக வெள்ளை , பிரமேகம் , தந்தி மேகம் , சிறுநீர்ப் பாதை அழற்சி , தீர்...

கறிவேம்பு ( Murraya koenigii ( I. ) Spreng .; Rutaceae )

படம்
கறிவேம்பு (  Murraya koenigii ( I. ) Spreng .; Rutaceae ) கொத்தான மாற்றடுக்கில் அமைந்த நறுமணமுள்ள இலைகளையும் கொத்தான மலர்களையும் , கரியநிறப் பழங்களையும் உடைய சிறுமரம் . காய்கறிச் சமையலுக்கு மணமூட்டியாக நாளிப்புக்குப் பயன்படுகிறது . தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் கறிவேப்பிலையாக வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது . இலை மருத்துவப் பயனுடையது .  இதனை மருந்தாகப் பயன்படுத்துவதால் பசி மிகும் ; தாது பலம் பெருகும் ; வயிற்றில் வெப்பமுண்டாகி வாயுவைத் தொலைக்கும் .  1..இலை சிறிதளவு , மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி , வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் கவளத்தில் பிசைந்து உண்ணக் குமட்டல் , வாத்தி , அஜீரண பேதி , தே பேதி , செரியா மாந்தம் , வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும் .  2 . கறிவேம்பு , சுக்கு , மிளகு , சீரகம் , இந்துப்பு , பொரித்தப் பெருங்காயம் சம அளவு இடித்து சூரணம் செய்து சுடு சோற்றில் நெய்விட்டுப் பிசைந்து உண்ண மலச்சிக்கல் , பேதி தீரும் . குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி தீரும் .  3 . கறிவேம்பு ஈர்க்கு , வேம்பு ஈர்க்கு , முருங்கை ஈர்க்கு , நெல்லி ஈர்க்க...

களா ( Caspinarumrissa L .; Apocynaceae )

படம்
 களா (Caspinarumrissa  L .; Apocynaceae )  முட்கள் உள்ள குறுஞ்செடி . வெண்மையான பூக்களையும் , சிவப்பு நிறக்காய்களையும் கறுப்புப் பழங்களையும் கொண்டது . பூவும் , காயும் புளிப்புச்சுவையுடையவை . கிளா என்றும் வழங்கப்பெறுகிறது . பூ , காய் , பழம் ,வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையளவ .  காய் , பழம் ஆகியவை பசி மிகுக்கும் . வேர்தாதுக்களின் வெப்பு தணிக்கும் . சளியாற்றும் . மாதவிலக்கைத் தூண்டும் . 1. காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன் கொள்ள பசியின்மை , சுவையின்மை , இரத்தப் பித்தம் , தணியாத தாகம் , பித்தக் குமட்டல் - ஆகியவை நீரும் .  2.வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்க்கரைக் கலந்து 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப் பித்தம் , சுவைபிள்மை , தாகம் , அதிக வியர்வை , சில்விஷங்கள் தீரும். 3. களாப் பழத்தை உணவுண்டபிள் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும் . 4. தூய்மையான களாப் பூவை நல்லெண்ணெயிலிட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வரக் கண்களிலுள்ள வெண்படலம் , கரும்படலம் , இரந்தப் படலம் , சதைப்படலம் ஆகியவை தீரும் .  5 ....

கழற்சிக் கொடி ( Caesalpinia bonduc ( L ) , Roxb .; Caesalpinioideae )

படம்
 கழற்சிக் கொடி (  Caesalpinia bonduc ( L ) , Roxb .; Caesalpinioideae )   சிறகுக் கூட்டிலைகளைக் கொண்ட முள் நிறைந்த கொடி . மஞ்சள் நிற மலர்களையும் , உருண்டை வடிவக் கொட்டைகளையும் உடையது . தமிழகமெங்கும் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும்  மிகுதியாகக் காணப்படுகின்றன . கொட்டைகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . இதில் வெள்ளை , கருப்பு , பச்சை , மஞ்சள் என நான்கு வகைகள் உள்ளன . வச்சிரப் பீசம் எனவும் குறிப்பிடுவதுண்டு . இலை , வேர் , பட்டை , விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை .  விதை தாது பலம் கொடுக்கும் . முறை நோய் தீர்க்கும் . வீக்கம் கட்டிகளைக் கரைக்கும் . இலையை வீக்கம் குறைக்க மருந்தாகப் பயன்படுத்தலாம் .  1 . கொழுந்து இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவர விரைவீக்கம் , விரையழற்சி மூலவீக்கம் , பிற எல்லாவீக்கங்களும் குணப்படும் .  2 . வேர்ப்பொடி 1 கிராம் காலை மாலை சாப்பிட்டு வர முறைக்காய்ச்சல் தீரும் .  3. கழற்சி விதையும் மிளகும் சமனளவாகப் பொடித்துக் கலந்து 4 கிராம் அளவாக காலை மாலை சாப்பிட்டு வரப் பழமையானக் காய்ச்சல் , இரைப்பிருமல் , குடல...