அரசு ( Ficus religiosa L .; Moraceae )
அரசு ( Ficus religiosa L .; Moraceae )
கூரிய இலைகளையுடைய பெருமரம் . ஊர் ஏரி , குளக்கரைகளில் புனித மரமாக வளர்க்கப்படுகிறது . தமிழகம் எங்கும் காணப்படுகிறது . கொழுந்து , பட்டை , வேர் , விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை .
கொழுந்து வெப்பு அகற்றித் தாகந்தணிப்பானாகவும் , விதை காமம் பெருக்கியாகவும் , வேர் , பட்டை ஆகியவை வீக்கம் குறைக்கும் மருந்தாகவும் பயன்படும் .
1 . துளிர் இலையை அரைத்துப் பற்றிடப் புண்கள் ஆறும் .
2 . வேர்ப்பட்டை 30 கிராம் 300 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சிப் பால் சர்க்கரை சேர்த்துப் பருகி வர வெட்டைச்சூடு , சொறி , தினவு , நீர்எரிச்சல் , சிரங்கு ஆகியவை தீரும் .
3 . மரப்பட்டைத் தூள் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து புண் சொறிகளுக்குப் பூசக் குணமாகும் .
4 . பட்டைத் தூள் 2 சிட்டிகை நீரில் ஊற வைத்து வடிகட்டிக் கொடுக்க விக்கல் , தொண்டைக் கட்டு , குரல்வளை நோய் தீரும்.
5. அரசு விதைத்தூள் உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டை நீக்கும் .
6 அரசங் கொழுந்தை குடிநீராக்கிக் குடிக்க ஈரம் , தாகம் ஆகியவை தீரும் .
7 . உலர்ந்த பழத்தை இடித்துப் பொடி செய்து 5 கிராம் வெந்நீரில் காலை , மாலை 20 நாள்கள் கொடுக்க சுவாசக் காசம் தீரும் .
கருத்துகள்
கருத்துரையிடுக