ஆனைக் கற்றாழை ( Furcraea foetida ( L ) Haw .; Agavaceae )

 ஆனைக் கற்றாழை (  Furcraea foetida ( L ) Haw .; Agavaceae ) 



பெரிய மடல்களையுடைய கற்றாழை இனம் . இராகாசிமடல் , ரயில் கற்றாழை என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது . அதிலிருந்து கிடைக்கும் தாருக்காக வறட்சியான இடங்களில் வளர்க்கப்படுகின்றது . இதன் மடல் , குருத்தின் கீழ் உள்ள கிழங்கு ஆகியவை மருத்துவப்பயனுடையவை .

 1 . சிறுநீர் பெருக்குதல் உடல் தேற்றுதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது . ஆனைக்கற்றாழை மடலை பட்டிப்பிழிந்த சாற்றில் போதுமான அளவு கேழ்வரகு மாவையோ மூசாம்பரப்பொடியையோ கலந்து கொதிக்க வைத்து வீக்கமுள்ள இடங்களில் பற்றுப்போட வீக்கம் கரையும் . 

2 . 50 கிராம் மடலுடன் 25 கிராம் நன்னாரி வேரைப் பொடித்துச் சேர்த்து ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை மதியம் மாலை V மி.லி யாகக் குடித்து வரப் பாலியல் நோயான கொறுக்குப் புண் , இரந்தி ஆகியவை தீரும் .

3.  குருத்தின் கீழ் உள்ள மென்மையான கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை கலந்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர வெள்ளை குணமாகும் . 

4 . ஆனைக்கற்றாழை வேரை 30 கிராம் நகக்கி 1 லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டிப் பாதிப்பாதியாய் காலை மாலை குடித்து வர சிறுநீரைத் தாராளமாக வெளிப்படுத்தும் . 


5 . மடலைக் குழகுழப்பாகுமாறு துவைத்து வலியுள்ள வைத்துக்கட்ட வலி குணமாகும். 


6. மடல் சாற்றை அடிபட்ட காயங்களின் மீது நடவிவைக்க சீழ்ப்பிடிக்காமல் ஆறும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )