அன்னாசி மற்றும் ஆகாச கருடன்
அன்னாசி ( Ananas cosmosus L .; Bromeliaceae )
தாழை இலை போன்ற நீண்ட அடுக்கான மடல்களை உடைய செடி .
கொல்லிமலை போன்ற இடங்களில் பேரளவில் பயிரிடப் பெற்றுப் பழமாக விலைக்குக் கிடைக்கும் .
இப்பழம் பூந்தாழம் பழம் எனவும் வழங்கப்பெறும் . இலை பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை .
நுண்புழுக் கொல்லுதல் , வியர்வை சிறுநீர் பெருக்குதல் , மலமிளக்குதல் , குருதிப்பெருக்கைத் தணித்தல் , மாதவிலக்கைத் தூண்டுதல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது .
இப்பழம் மாதவிலக்கைத் தூண்டும் ஆகையால் மாதவிலக்கைத் இப்பழம் உண்ணாதிருத்தல் நலம் . அதிக அளவில் உண்டால் தொண்டைக் கட்டும் .
1 . கருவுற்றவர் இலைச்சாறு 10 மி.லி. யில் சிறிது சர்க்கரைக் கலந்து கொடுக்க விக்கல் நிற்கும் .
2. பழச்சாற்றைச் சற்று சூடுசெய்து குடித்துவர வாந்தி , வயிற்றுக் கடுப்பு காமாலை ஆகியவை தீரும் .
3 . பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி நாள்தோறும் இருவேளை 10-15 மி.லி. உண்டுவரத் தாகம் , வாந்தி , வெள்ளை , வெட்டை , சுவையின்மை ஆகியவை தீரும் .
ஆகாச கருடன் ( Corallocarpus epigaeus Rottler .; Cucurbitaceae )
கோவையினத்தைச் சேர்ந்த பெருங்கிழங்குடைய ஏறு கொடி . தமிழகமெங்கும் தன்னிச்சையாய் வளர்கிறது . கசப்புச் சுவையுடைய கிழங்கே மிகவும் மருத்துவப் பயனுடையது . உடல் தேற்றவும் உடல் பலம் மிகுக்கவும் மருந்தாகும் .
1. கொட்டைப்பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50 மி.லி. நீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய் நரி குரங்கு பூளை முதலிய விலங்குகளின் கடிநஞ்சு தீரும் .
2 . புளியங்கொட்டை அளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள் நஞ்சும் அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும் .
3 . கிழங்கைத் தோல்நீக்கி உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டிப் பொடியை சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு உப்பு புளி நீக்கி உணவு உண்டு வரப் பாம்பு நஞ்சு , கீல் பிடிப்பு , மேக நோய்கள் தீரும் .
4. 5 கிராம் கிழங்குப்பொடியை 100 மி.லி. நீரில் கலந்து காய்ச்சிக் காலை மாலை சாப்பிட்டு வரச்சீதப்பேதி தீரும்.
5.100 கிராம் கிழங்குடன் 50 கிராம் வெங்காயம் 20 கிராம் சீரகம் சேர்த்தரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கீல்வாதத்துக்குப் பற்றிட குணமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக