அமுக்கரா ( Withania somnifera ( L. ) Dun .; Solanaceae )

 அமுக்கரா

(  Withania somnifera ( L. ) Dun .; Solanaceae )


















 மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் சிறுகிளைகளையும் உடைய ஐந்து அடிவரை வளரக்கூடிய குறுஞ்செடிவகை . கோவையிலும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் தானே வளர்வது. கிழங்கே மருத்துவப் பயனுடையது . 

 ஏற்றுமதிப் பொருளாகப் பயிர் செய்யப்படுகிறது . உலர்ந்த கிழங்குகள் மருந்துக்கடைகளில் கிடைக்கும்.  இக்கிழங்கு ஆயுர்வேதத்தில் அசுவகந்தித் தைலம் ஆகியவை பெரும்பாலோர்க்கு அறிமுகமானதே . 
நோய்நீக்கிஉடல்தேற்றியாகவும் , பித்தநீர்ப் பெருக்கியாகவும் , குடல் தாதுவெப்பு அகற்றியாகவும் , பசி உண்டாக்கியாகவும் , காமம் பெருக்கியாகவும் செயற்படும் .

 1 . இலையை மென்மையாய் அரைத்துப் பற்றுப்போட அரசபிளவை , எரிகரப்பான் , பாலியல் நோய்ப்புண் ஆகியவை குணமாகும் .

 2 . 2 கிராம் உலர்ந்த கிழங்குப் பொடி தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம் , காசம் , பசியின்மை , மூட்டு அழற்சி , செரிமானக் குறைவு . இருமல் , உடல் வீக்கம் , முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும் .

 3 . இலை வேர் ஆகியவற்றைச் சமனளவு எடுத்து மையாய் அரைத்துப் பற்றுப் போட அரசபிளவை , ஆறாத புண்கள் , மூட்டு அழற்சியினால் ஏற்படும் வீக்கம் ஆகியவை தீரும் .

4. காயை அரைத்துப் படர்தாமரையில் தடவிவரத் திரும் . 

 5. வேர்ச்சூரணம் 5 கிராம் தேனில் காலை , மாலை கொள்ளச் சளி கரைந்து ( நிமோனியா ) கபவாதச் சுரம் தீரும் . 
 
6. சூரணத்தைப் பாலில் கலந்து வீக்கம் , படுக்கைப்புண் ஆகியவற்றிற்குப் பூச ஆறும் . 

7. வேர்ச்சூரணம் தூதுவேளை சமன் கலந்து 5 கிராம் நெய் அல்லது பால் அல்லது வெண்ணெயில் தினம் , மூன்று வேளை பத்தியத்துடன் கொடுத்து வரச் சிலேத்துமக் காய்ச்சல் , பக்கச் சூலைக் காய்ச்சல் ( Plurasy ) தீரும் . 

8. அமுக்கரா சூரணம் 10 கிராம் , கசகசா 30 கிராம் , பாதாம் பருப்பு 10 கிராம் , சாரப்பருப்பு 5 கிராம் , பிஸ்தாப்பருப்பு 5 கிராம் ஊற வைத்துத் தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாள்கள் சாப்பிட இழந்த இளமையைப் பெறலாம் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )