ஆவாரை ( Cassia auriculata L .; Caesalpinioideae) மற்றும்ஆனை நெருஞ்சில் ( Pedalium murex L .; Pedaliaceae )
ஆவாரை ( Cassia auriculata L .; Caesalpinioideae )
சதை , நரம்பு ஆகியவற்றைச் சுருக்கும் தன்மையுடையது . விதை காமம் பெருக்கியாகச் செயற்படும் .
1.பூச்சூரணத்தையோ , பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ , இதழ்களைக் குறிக்கூட்டாகவோ தாள்தோறும் பயன்படுத்த மேக வெட்டை , தேக உட்குடு . உடல் நாற்றம் , உடலில் உப்புப் பூத்தல் , வறட்சி , ஆயாசம் நீங்கும் . உடலுக்குப் பலத்தைத் தரும் . தேகம் பொன்னிறமாகும் .
2 . ஆவாரையின் பஞ்சங்க ( வேர் , இலை , பட்டை , பூ , காய் ) சூரணம் 10 கிராம் வீதம் காலை , மதியம் , மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம் , மதுமேகம் , மிருதாகம் , மிகுபசி , உடல் மெலிவு , உடல் எரிச்சல் , உடல் முழுவதும் வேதனை , பலக்குறைவு , மயக்கம் , மூச்சுத்திணறல் ஆகியவை தீரும் . 45 , 90 , 135 நாட்கள் சாப்பிட வேண்டும் .
3 . ஆவாரம் பட்டை , கஸ்தூரி மஞ்சள் , ஒரு மிளகாய் , சிறிது சாம்பிராணி நல்லெண்ணெயுடன் ( ஆவாரைத் தைலம் ) காய்ச்சி் , தலை முழுகி வர மதுமேகம் உடையவருக்குக் காணும் தோல் வெடிப்பு , வறட்சி , எரிச்சல் குணமாகும் .
4 . 20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி . லி . யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை , மாலை குடித்து வரமதுமேகம் , சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் பெரும்பாடு . தாகம் ஆகியவை தீரும் .
ஆனை நெருஞ்சில் ( Pedalium murex L .; Pedaliaceae )
சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலைகளையுடைய சிறு செடி தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடையது . தமிழகம் முழுவதும் மணற்பாங்கான இடங்களில் தானே வளர்கிறது . இலை , தண்டு , விதை ஆகியவை மருத்துவப்பயறுடையவை . சிறுநீர்ப் பெருக்குதல் , வெப்புதணித்தல் , குளிர்ச்சிதரல் , உடலுரமாக்கல் , காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது .
1 . ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும் . இதனைச் சிறிது சர்க்கரைச் சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர்க்கடுப்பு , வெள்ளை , சொட்டு மூத்திரம் , மலட்டுத்தன்மை ஆகியவை தீரும் .
2 . 10 கிராம் இலைப் பொடி சர்க்கரையுடன் பாலில் கலந்து பருகிவர வெள்ளை , வெட்டை , மூட்டு அழற்சி ஆகியவை தீரும் .
3.50 கிராம் இலையை மென்மையாய் அரைத்துத் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை நீரெரிச்சல் , வெள்ளை , உடம்பெரிவு ஆகியவை குணமாகும் .
4 . இலையை அரைத்துப் பற்றிட காயங்கள்.ஆறும் .
5 . 20 கிராம் விதையை ஒன்றிரண்டாய் உடைந்து அரைவிட்டர் நீரிலிட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டிக் காலை மாலையாகச் சாப்பிட்டு வர நீர்ச்சுருக்கு நீரும் . விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும் .
கருத்துகள்
கருத்துரையிடுக