அரிவாள் முனைப் பூண்டு மற்றும் அவரை

 அரிவாள் முனைப் பூண்டு ( Sida caprinifolia L .; Malvaceae ) 












கூர்நுனிப் பற்கள் கொண்ட ஆப்பு வடிவ இலைகளை உடைய மிகக் குறுஞ்செடியினம் . மாரிக் காலத்தில் தமிழகமெங்கும் சாலையோரத்தில் தானே வளரும் . இலையே மருத்துவப் பயனுடையது . குருதிக் கசிவைத் தடுக்கும் மருந்தாகச் செயற்படும் . 

1. இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும் . 

2. இதனுடன் சமனளவு குப்பைமேனி இலை , பூண்டுப்பல் 2 , மிளகு 3 சேர்த்து அரைத்துப் புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுத்து , காயத்திலும் கட்ட நஞ்சு முறியும் . உப்பு , புளி நீக்கவும் .

 அவரை ( Lablab purpurus L .; Papilionoideae ) 












 தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை . இலை , பிஞ்சுஆகியவை மருத்துவப் பயனுடையவை . விதை முதிர்ந்த காய்களைஉண்ணாதிருத்தலே நலம் .

 இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது . பிஞ்சு தாது வெப்பு அகற்றும் .

1 . அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி , மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.

 2 . இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ , சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும் . 

3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி , தலைப்பாரம் நீங்கும் . 

4 . விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம் , புண் , காய்ச்சல் , கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )