இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காசறை ( Hibicus cannabinus L .; Malvaceae

படம்
 காசறை (  Hibicus cannabinus L .; Malvaceae )  கைவடிவ பசிய இலைகளையும் சுணையுடைய சிறு கிளைகளையும் , தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் , உருண்டை வடிவ விதைகளையும் உடைய சிறுசெடி . புளிச்சக் கீரை என்றும் வழங்கப்பெறும் . இதன் கீரைக்காகத் தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது . இலை , பூ , விதை ஆகியவை மருத்துவப்பயனுடையவை .  இலை எரிச்சல் தணித்தல் கொதிப்புத் தணித்தல் காமம்பெருக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது .விதை காமம் பெருக்கும் .  1 . இலையை அரைத்துக் கட்டிகளுக்குப் பற்றுப் போட அவை உடைந்து ஆறும் . 2. பூவைப் பிழிந்தெடுத்த சாறு 10 மி.லியில் ஒரு சிட்டிகை மிளகுப்பொடியும்சர்க்கரையும் கலந்து நாள்தோறும் காலை மாலை பருகி வர சுவையின்மை பித்த வாந்தி ஆகியவை குணமாகும் .  3. 250 கிராம் இளங்காய்களைச் சிதைத்து 2 லிட்டர் நீாவிட்டு அரை லிட்டராகுமாறு காய்ச்சி வடிகட்டி அதில் 1 கிலோ சீனிசேர்த்து தேன்பதமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு 20 மி.லி. சமஅளவு நீரில் கலந்து காலை மாலை சாப்பிட்டுவர செரிமானமின்மை சரியாகும் . பித்தம் தணியும் . 4. கீரையைச் சமைத்து உணவோடு உண்டுவர உடலைத் தேற்றும் .

காட்டவுரி (Indigofera tinctoria L .; Papilionoideae )

படம்
  காட்டவுரி (Indigofera tinctoria L .; Papilionoideae ) கரும்பச்சை இலைகளையுடைய சிறுசெடியினம் . நீலதிறச்சாறு உடையது . இதனால் நீலி எனவும் பெயர் பெறும் . எல்லா பாசாணங்களையும் சுத்தி செய்ய வல்லது . இலை , வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை .  வேர் நஞ்சுமுறிக்கும் மருந்தாகவும் , இலை வீக்கம் , கட்டி முதலியவற்றை கரைக்கவும் , நஞ்சு முறிக்கவும் , நோய் நீக்கி உடல் தேற்றியாகவும் , மலமிளக்கியாகவும் , புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படும் .  1 . அவுரி இலையைக் கொட்டைப்பாக்கு அளவு அரைத்து 250 மி.லி , வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலையில் மூன்று நாள் கொடுக்க மஞ்சள் காமாலை , அந்திமாவை தீரும் .  2.அவுரிவேர் 20 கிராம் , அறுகம்புல் 30 கிராம் , மிளகு 3 கிராம் மையாய் அரைத்து புன்னைக்காய் அளவு காலை , மாலை சாப்பிட்டு இச்சா பத்தியம் இருக்க மருந்து வேகம் அனைத்தும் திரும்.இம்மருந்தை நாள் தோறும் 3 வேளை உப்பு , புளி தீங்கிச் சாப்பிடப் பாம்பு , தேன் , பூரான் , செய்யான் ஆகியவற்றின் தஞ்சு நீங்கும் .  3 . அவுரிவேர்ஐ கிராம் , விளகு 10 கிராம் . அரைத்துச் சுண்டைக்காய் அளவு காலை , ம...

கீழாநெல்லி ( Phyllanthus amarus schum & Thom ; Euphorbiaceae )

படம்
கீழாநெல்லி ( Phyllanthus amarus schum & Thom ; Euphorbiaceae ) மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்த சிறு இலைகளையுடைய குறுஞ்சொ . இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும் . அரை மீட்டர் உயரத்திற்கும் குறைவாகவே வளரும் . கீழ்க்காய் நெல்லி , கீழ்வாய் நெல்லி ஆகியவை இதல் பிற பெயர்கள் , தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் ஈரமான இடங்களில் தானே வளர்கிறது . செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது .  சிறு நீர்ப் பெருக்கியாகவும் வெப்பு அகற்றியாகவும் வீக்கம் , கட்டி ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் செயற்படும் .  1 . சமூலம் 300 கிராம் , 4 மிளகுடன் சிதைத்து 2 ருவளை நீரில் போட்டு ! ருவளையாகக் காய்ச்சி 3 வேளையாகக் குடித்து வரச்குடு , சுரம் , தேக எரிச்சல் தீரும் .  2.இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக் குளிக்கச் சொறி , சிரங்கு , நமைச்சல் தீரும் .  3 . இவை , முக்கிரட்டை இலை , பொள்னாங்கண்ணி இலை சமஅளவு அரைத்து கழற்சிக்காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண் , பார்வை மங்கல் , வெள்ளெழுத்து தீரும் .  4 . இலைச்சாறு , பொன்...

காரை ( Camthium parviflorum Lam .; Rubiaceae )

படம்
காரை ( Camthium parviflorum Lam .; Rubiaceae )  இலையும் முள்ளும் மாற்றடுக்கில் அமைந்த புதர் . கனிகள் உண்ணக் கூடியவை . தமிழகமெங்கும் தாலே வளர்பவை . இலை , பழம் ஆகியவை மருத்துவப் பயனுடையவை .  நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் தன்மையுடையது .  1. இலையை வேகவைத்துக் கடைந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு . இசந்த சீதப்பேதி , அதிசார பேதி குளளமடையும் .  2 . காரைப் பழங்களைக் காலை மாலை சாப்பிட்டு வர குடுதணியும் : இரைப்பை நுரையீரள் முதலிய அக உறுப்புகள் பலப்படும் .  3 . உலர்ந்த பழங்களை தீரிலிட்டுக் கொதிக்க வைத்து காலை மாலை சாப்பிட்டுவர சீதப்பேதி வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும் . கிணற்றுப்பாசான் ( Tridax procumbens L .; Compositae )  பற்களுள்ள சற்று நீண்ட இலைகளையும் மஞ்சள் நிறப் பூக்களையும் உடைய சிறு செடி சரமான இடங்களில் தானே வளரும் தன்மையுடையது . வெட்டுக்காலப் பச்சிலை என்றும் குறிப்பிடுவதுண்டு .   1. இலைகளே மருத்துவப் பயனுடையவை . இலையை நீர் விடாது அரைத்து வெட்டுக்காயம் , சிராய்ப்பு -ஆகியவற்றின் பற்றிடச்சீழ்பிடிக்காமல் விரைந்து ஆறும் .