ஆடா தொடை ( Adhatoda vasica Nees .; Acanthaceae )
ஆடா தொடை ( Adhatoda vasica Nees .; Acanthaceae )
நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும் வெள்ளைநிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி . சிற்றூர்களில் வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது . தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது . இலை , பூ . வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை . சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும் , வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் , இசிவு நோய் நீக்கியாகவும் செய டும் . 1 . இலைச் சாறும் தேனும் சமஅளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி , கோழை மிகுந்து மூச்சுத் திணறல் , இருமல் , இரத்தம் கலந்த கோழை வருதல் ஆகியவை குணமாகும் .
குழந்தைகளுக்கு 5 + 5 துளி
சிறுவர் 10+10 துளி
பெரியவர் 15 + 15 துளி
2. இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை , மாலை கொடுத்து வரச் சீதப்பேதி , இரத்தப்பேதி குணமாகும் .
3 . 10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை , மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் ( T.B. ) காசம் , இரத்தக் காசம் , சளிச்சுரம் , சீதளவலி , விலாவலி ஆகியவைத் தீரும் .
4. ஆடாதொடை வேருடன் சுண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு , சுவாச காசம் , சன்னி , ஈளை , இருமல் , சளிச்சுரம் , என்புருக்கி , குடைச்சல் வலி ஆகியவை குணப்படும் .
5 . ஆடாதொடை இலையையும் , சங்கன் இலையையும் வகைக்கு ஒரு பிடி அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை , மாலை பருகி வரக் குட்டம் , கரப்பான் , கிரந்தி , மேகப்படை , ஊறல் , விக்கல் , வாந்தி , வயிற்றுவலி தீரும் .
6 . உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் புகைப்பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும் .
7 . 700 கிராம் தூய இலைகளை நறுக்கி நெய்யில் வதக்கியதில் அக்கரகாரம் , சித்தரத்தை வகைக்கு 10 கிராம் , இலவங்கம் 10 கிராம் , ஏலம் 4 ஆகியவற்றைத் தூள் செய்து போட்டுப் பொன் வறுவலாய் வறுத்து 2 லிட்டர் நீர்விட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டியதில் 1 கிலோ சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி ( ஆடா தொடை மணப்பாகு ) வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வர நீர்க்கோவை தீரும் . ஒரு நாளைக்கு 3 வேளையாக நீண்ட நாள்கள் கொடுத்து வரக் காசம் , என்புருக்கி , மார்ச்சளி , கப இருமல் , புளூரசி , நீடித்த ஆஸ்துமா , நிமோனியா ஆகியவை குணமாகும் . குரல் இனிமை உண்டாகும் .
8 . ஆடாதொடை , கோரைக்கிழங்கு , பற்பாடகம் , விஷ்ணுகாந்தி , துளசி , பேய்ப்புடல் , கஞ்சாங்கோரை , சீந்தில் வகைக்கு ஒரு பிடி 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 50 மி.லி. அளவாகப் பருகி வர
( அஷ்ட மூலக் கஷாயம் )
எவ்விதச் சுரமும் நீங்கும் .
9. வேர்க்கஷாயத்தைக் கடைசி மாதத்தில் காலை , மாலை கொடுத்து வரச் சுகப்பிரசவம் ஆகும் .

Very useful sisaa
பதிலளிநீக்கு