துளசி( Holy Basil ) மருத்துவ குணங்கள் அதன் பயன்கள்.


துளசி ( Ocimum tenuiflorum L .; Labiatae )

 கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறு செடி . துழாய் , துளவம் என்றும் அழைக்கப்பெறும் . திருமாலுக்குப் பூசனை மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது . தமிழகமெங்கும் தானே வளர்கிறது . வீடுகளில் பூசனைக்காக வளர்ப்பதுமுண்டு . இலை , பூ , விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை . நல்துளசி , கருந்துளசி , செந்துளசி , கல்துளசி , முள்துளசி முதலிய பல இனங்கள் உள்ளன .

 கோழையகற்றுதல் , நோய்நீக்கி உடல் தேற்றுதல் , வியர்வைப் பெருக்குதல் , முறைநோய் அகற்றுதல் ஆகிய குணங்களையுடையது .


 1.  இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்த சாறு 5 மி.லி. காலை , மாலை சாப்பிட்டு வரப் பசியை அதிகரிக்கும் . இதயம் , கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும் . சளியை அகற்றும் , தாய்ப்பாலை மிகுக்கும் . 

2.  இலை 20 , தோல் நீக்கிய இஞ்சி 2 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் போட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி தினம் 3 வேளை 1முடக்கு வீதம் குடித்து வரப் பித்த சீதளக் காய்ச்சல் 3 நாள்களில் தீரும் . 

3.  அரை பிடி இலையைச் சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி 15 கிராம் கற்கண்டு 2 தேக்கரண்டி தேனும் கலந்து தினம் 4 வேளைக்கு 1 முடக்கு வீதம் குடிக்க மார்பு நோய் , காச நோய் , காய்ச்சல் ஆகியன தீரும் .

4.  துளசி 50 கிராம் , மிளகு 20 கிராம் மையாய் அரைத்துப் பயறளவு மாத்திரையாக்கிக் காலை மாலை வெந்நீரில் இழைத்துக் கொடுக்கச் சகலவிதக் காய்ச்சலும் தீரும் .

5. துளசி விதை 10 கிராம் , அரச விதை 10 கிராம் அரைத்துச் சுண்டைக்காயளவு மாத்திரையாக்கி காலை மாலை 1 மாத்திரை பாலில் உரைத்துச் சாப்பிடக் கணச்சூடு தீரும் .
 6.  இலைச்சாறு 1 மி.லி. , தேன் 5 மி.லி. , வெந்நீர் 5 மி.லி. கலந்து காலை மாலை 20 முதல் 40 நாள்கள் சாப்பிட இதய நோய் சாந்தமாகும் .

 7.  கருந்துளசி இலை 25 , செம்பரத்தம் பூ 2 , அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராக்கி 2 மணிக்கு 1 முறை 1 முடக்கு வீதம் 10 நாள்கள் குடிக்க இதயத்தில் குத்துவலி , பிடிப்பு வலி ஆகியவை தீரும். 

8. கருந்துளசி 1 பிடி , மருதம் பட்டை 40 கிராம் சிதைத்துப் போட்டு 1 லிட்டரை கால் லிட்டராகக் காய்ச்சி வடித்து 2 தேக்கரண்டி தேன் கலந்து 1 முடக்கு வீதம் நாளைக்கு 6 வேளை 20 நாள்கள் சாப்பிட்டு வர சீரற்ற இதயத்துடிப்பும் இதயத்தைக் கட்டிப்பிடிப்பது போன்ற வலியும் குறையும் .

 9. இலை 1 பிடி , இஞ்சி 1 துண்டு , தாமரை வேர் 40 கிராம் அரைத்துக் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பற்றிட விலா வலி தீரும் .
 
10.  இலை , கதிர்களுடன் வாட்டிப்பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 , 12 நாள்களில் காது மந்தம் தீரும். 

11.  துளசிச்சாறு , கரிசாலைச்சாறு இரண்டும் கலந்து காதில் விட்டு வரக் காதுவலி இரத்தம் , சீழ்வடிதல் ஆகியவை குணமடையும் . 

12.  துளசிப் பூங்கொத்து , திப்பிலி , வசம்பு சமனளவு சூரணித்து 4 மடங்கு சர்க்கரை கலந்து 1 சிட்டிகை தேனில் சாப்பிடக் கக்குவான் தீரும். 

13.  விதைச்சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )