அகத்தி(அகத்திப்பட்டைக் குடிநீர்)மற்றும் அகத்தித் தைலம்

அகத்தி ( Sesbania grandiflora ( L ) Poiret .; Papilionoideae )





 




1.வெற்றிலைக் கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறுமென்மரவகை . தமிழ்நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது . கீரை , பூ , பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன . இலை , பூ , வேர் , பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை . 

பொதுவாக வெப்பு அகற்றியாகவும் , கீரை மலமிளக்கியாகவும் , வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும் . 

1 . கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும் , மலச்சிக்கல் , காபி , டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும் .

2 . வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் அகத்தி மரப்பட்டையையும் , 

(அகத்திப்பட்டைக் குடிநீர் )

 குடித்துவர , சுரம் , தாகம் , கை  கால் எரிவு , மார்பு எரிச்சல் , உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல் , நீர்க்கடுப்பு , நீர்த்தாரை எரிவு . அம்மைச்சுரம் ஆகியவை தீரும் . 

3 . இலைச்சாறும் நல்லெண்ணெயும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமுறக் காய்ச்சி வடிப்பதற்கு முன் கஸ்தூரி மஞ்சள் , சாம்பிராணி , கிச்சிலிக் கிழங்கு விளாமிச்சம் வேர் வகைக்கு 20 கிராம் தூள் செய்து போட்டுக்கலக்கி வடிகட்டி ( அகத்தித் தைலம் ) வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்து வரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும் . கண்கள் குளிர்ச்சி பெறும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )