அக்கரகாரம் (Compositae )

 அக்கரகாரம் (Anacyclus pyrethrum , Compositae )


மலைப்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு செடியினம் . 

இதன் வேர் மருத்துவப் பயனுடையது . 
உலர்ந்த வேர் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் . 
தொண்டையில் நோய்த்தொற்று மூச்சுக்குழல் உள்ள நோய்களுக்கும் அதன் தொடர்பான நோய்களுக்குச் சிறந்த மருந்து .
உமிழ்நீர்ப் பெருக்குதல் , பட்ட இடத்தில் எரிச்சலூட்டுதல் , நாடி நடையை மிகுத்து வெப்ப மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது . 
1 . ஒரு துண்டு வேரை மெதுவாக நீண்ட நேரம் மென்று விழுங்க பல்வலி , அண்ணாக்குத் தூறு அழற்சி , தொண்டைக் கம்மல் , நாக்கு அசைக்கமுடியாமை , நீர்வேட்கை ஆகியவை தீரும் . 

2 . உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்ச வலிப்பினால் ஏற்பட்ட  நரம்புப் பிடிப்பு தீரும் . 
3 . 30 கிராம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீரிலிட்டு  250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி  வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய்கொப்பளித்து வர பல்வலி நீங்கி பல்லாட்டம் குறையும் . வாய் தொண்டை ஆகியவற்றில் உள்ள புண்கள் ஆறும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )