ஆகாயத்தாமரை ( Pistia stratiotes L .; Araceae

  ஆகாயத்தாமரை ( Pistia stratiotes L .; Araceae ) 

நீரில் மிதக்கக்கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள் . காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது . அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு . தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது . இலைகளே மருத்துவப் பயனுடையவை . 

வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம் .

 1 . இலையை அரைத்துக் கரப்பான் , தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக்கட்டிவர விரைவில் ஆறும் . ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம் . ஆசனகுத்தல் ஆகியவை தீரும் . 

2. 25.மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை , மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும் . மேலும் நீர்ச்சுருக்கு , மூலம் , சீதபேதி , இருமல் ஆகியவை தீரும் . 

3 . இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும் . 

4 . இலைச்சாறு அரை லிட்டர் , நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு , சந்தனத் தூள் , வெட்டி வேர் , கஸ்தூரி மஞ்சள் , சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து ( ஆகாயத் தாமரைத் தைலம் ) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு , கண்ணெரிச்சல் , மூல நோய் ஆகியவை தீரும் . 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )