அசோகு மற்றும் அதிமதுரம்

 அசோகு 

( Saraca indica L .; Caesalpinioideae )



 









நீண்ட கூட்டிலைகளையும் செந்நிற மலர்களையும் உடைய செங்குத்தாக நெடிதுயர்ந்து வளரும் மரம் . அழகு தரும் மரமாக வீட்டுத் தோட்டங்களில் வளர்ப்பதுண்டு . தமிழ்நாட்டில் மலைப்பாங்கான இடங்களில் காணப்படுகின்றன . பட்டை , பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை . 

சதை , நரம்பு ஆகியவற்றின் வீக்கம் அகற்றியாகவும் , கருப்பைக் குற்றங்களை நீக்கும் மருந்தாகவும் செயற்படும் . 

1 . 100 கிராம் மரப்பட்டையைச் சிதைத்து 400 மி.லி நீரிலிட்டு 100 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி 100 மி.லி பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருகிவர பெரும்பாடு , வெட்டை , மூலம் , கட்டிகள் , வயிற்றுக்கடுப்பு ஆகியவை தீரும் .

 2 . மரப்பட்டை 40 கிராம் , மாதுளம் வேர்ப்பட்டை 20 கிராம் பச்சையாகச் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 1 நாள் ஊறவைத்து வடிகட்டி 30 மி.லி. அளவாக 3,4 வேளை தினமும் சாப்பிட்டு வர 1 வாரத்தில் எவ்வளவு நாளான பெரும்பாடும் தீரும் . காரம் , புளி நீங்கலாகச் சாப்பிடவும் . 

3 . அசோகு பூ , மாம்பருப்பு சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை , பாலில் கொள்ளச் சீதப்பேதி , இரத்தப்பேதி தீரும் .

 4 . அசோகுப் பட்டை , மாதுளை வேர்ப்பட்டை , மாதுளம் பழ ஓடு சமனளவு பொடி செய்து 3 சிட்டிகை , காலை , மாலையாக வெந்நீரில் கொள்ளக் கருச்சிதைவு , வயிற்றுவலி , கர்ப்பச் சூலை , வாயுத்தொல்லை நீங்கும் . 100 , 120 நாள்கள் சாப்பிடப் பெண் மலடு தீரும் .

 அதிமதுரம் (  Glycyrrhiza glabra L .; Papilionoideae ) 



















மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீலநிறப் பூக்களையும் உடைய சிறு செடியினம் . மருத்துவப் பயனாகும் தண்டு உலர்ந்த நிலையில் நாட்டுமருத்துக் கடைகளில் கிடைக்கும் . சளி இருமல் ஆகியவற்றுக்கான மருந்தாகப் பயன்படுகிறது . புண்ணழுகல் ஆற்றுதல் , சளியகற்றுதல் , வெப்பகற்றல் , பித்தநீர் பெருக்கல் , எரிச்சலூட்டல் , குருதிப்போக்கு அடக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது .
 1 .  1 அல்லது 2 கிராம் அதிமதுரப் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டு

 வர மார்பு , ஈரல் , இரைப்பை , தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி தீரும் . இருமல் , மூலம் , தொண்டைக் கரகரப்பு , நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும் . 

2 . அதிமதுரப் பொடி , சந்தனத்தூள் சமன் கலந்து 1 கிராம் அளவாகப் பாலில் கொடுத்து வர இரத்த வாந்தி நிற்கும் . அக உறுப்புகளில் புண் ஆறும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )