கறிவேம்பு ( Murraya koenigii ( I. ) Spreng .; Rutaceae )
கறிவேம்பு ( Murraya koenigii ( I. ) Spreng .; Rutaceae )
இதனை மருந்தாகப் பயன்படுத்துவதால் பசி மிகும் ; தாது பலம் பெருகும் ; வயிற்றில் வெப்பமுண்டாகி வாயுவைத் தொலைக்கும் .
1..இலை சிறிதளவு , மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி , வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் கவளத்தில் பிசைந்து உண்ணக் குமட்டல் , வாத்தி , அஜீரண பேதி , தே பேதி , செரியா மாந்தம் , வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும் .
2 . கறிவேம்பு , சுக்கு , மிளகு , சீரகம் , இந்துப்பு , பொரித்தப் பெருங்காயம் சம அளவு இடித்து சூரணம் செய்து சுடு சோற்றில் நெய்விட்டுப் பிசைந்து உண்ண மலச்சிக்கல் , பேதி தீரும் . குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி தீரும் .
3 . கறிவேம்பு ஈர்க்கு , வேம்பு ஈர்க்கு , முருங்கை ஈர்க்கு , நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு , மிளகு , சீரகம் வகைக்கு 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் வேளைக் கொடுக்க சளி , இருமல் , சுரம் , வாத சுரம் தீரும் .
4. ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம் , மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறும் வயிற்றில் 45 நாள்கள் கொடுக்கப் பித்த மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும் .
5 , கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்க்கரைப் பொடி கலந்து காலை மாலை / தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர்க்கோவை , குதக வாய்வு தீரும்
கருத்துகள்
கருத்துரையிடுக