கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )
கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae )
வெளிர் நிறமான முட்டை வடிவ வெகுருட்டல் மணமுள்ள இலைகளையும் வெண்ணிறப்பூக்களையும் உடைய மிகச் சிறு செடி . தமிழகமெங்கும் தரிசுகளிலும் புதர்க் காடுகளிலும் காணப்படுகிறது . இலைகளே மருத்துவப் பயனுடையவை . நுண்ணுயிர்க் கொல்லியாகச் செயற்படும் .
1. இலையை அரைத்து நகச்சுற்று , புண் , சிரங்கு ஆகியவற்றுக்குப் பூச குணமாகும் .
2 . ஐந்தாறு இலைகளை மென்று தின்னத் தேள் , பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும் . கடிவாவில் இலையை அரைத்துப் பூசலாம் .
3. இலையுடன் சமனெடை நாட்டுக் கல்தார் சேர்த்தரைத்து அடைதட்டிக் காய வைத்து வறட்டியினிடையே வைத்துப் புடமிட்டு எடுத்துப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல்வளி , பல்லாட்டம் , பல்லரணை , பல் சொத்தை , ஈறு வீக்கம் , ஈறு புண் , இரத்தக் கசிவு ஆகியவை நீரும் .
கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )
மணப்பொருளாகப் பயன்படும் ஒரு பூ மலைப்பாங்கான இடங்களில் விளைகிறது . பலசரக்குக் கடைகளில் கிடைக்கும் . இசிவகற்றுதல் , வயிற்று வாயுவகற்றல் , செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது .
1 . கிராம்புப் பொடியை அரை கிராம் தேனில் குழைத்துக் காலை மாலை சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலப்படும்.
2. இரண்டு கிராம் கிராம்புப் பொடியைச் சமன் பனை ரெ மாதவிடாய்க் காலத்தில் 3 நாள்களும் காலை , மாலை கொடுத்து வரபிரச்சிக்கம் . அதனால் ஏற்படும் அடிவயிற்று வலியும் தீரும் .
3. கிராம்புப் பொடியைப் பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வாவாய் . நாற்றம் , ஈறுவீக்கம் , பல் வலி ஆகியவை குணமாகும் .
கருத்துகள்
கருத்துரையிடுக