காக்கரட்டான் ( Clitoria ternatea L .; Papilionoideae )
காக்கரட்டான் ( Clitoria ternatea L .; Papilionoideae )
இலை , வேர் , விதை ஆகியனவ மருத்துவப் பயனுடையவை .
சிறுநீர் பெருக்குதல் , குடற்பூச்சிக்கொல்நதல் , தாதுவெப்பு அகற்றுதல் , பேதி , வாத்தி , தும்மல் உண்டாக்குதல் ஆகிய குணங்களையுடையது .
1. காக்கரட்டான் பச்சை வேர் 40 கிராம் பிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 30 மி.லி : யாகக் காய்ச்சி / முடக்கு வீதம் 2 மணிக்கு ! தடவை 6 முறை சாப்பிடச்சுரம் , தலைவலி ஆகியவை தீரும் .
2 . வேரைப் பாலில் அவித்து , பாலில் அரைத்துச் சுண்டைக்காயளவு காலை மாயை பாலில் சாப்பிட மேக வெள்ளை , பிரமேகம் , தந்தி மேகம் , சிறுநீர்ப் பாதை அழற்சி , தீர் எரிச்சல் ஆகியவை தீரும் .
3 . வெள்ளைக் காக்கரட்டான் வேர் , கட்டுக்கொடி இலை , கீழாநெல்லிச்சமூலம் , பெருநெருஞ்சில் இலை , அறுகம்புல் வகைக்கு 1 பிடியுடன் 5 , 6 மிளகு சேர்த்து ழை போல் அரைத்து நெல்லிக்காய் அளவு தயிரில் கொள்ள எவ்வளவு நாள்பட்ட வெள்ளை ஒழுக்காயிறும் தீரும் .
4 . கருங்காக்கரட்டாள் வேரைப் பாலாவியில் வேசுவைத்து உலர்த்திப் பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய் , வாயுவலி , சீதளம் , வாதச் தேளம் நீங்கும் . இச்சூரணத்தில் 5 அரிசி எடை குழந்தைகளுக்குக் கொடுக்க மந்தம் , மலச்சிக்கல் நீங்கும் .
5 . நெய்யில் வறுத்து இடித்த விதைச்சூரணம் சமுதல் 10 அரிசி எடை வெந்நீருடன் கொடுக்கக்குழந்தைகளுக்கான இழுப்பு , மூர்ச்சை , நரம்பு இழுப்பு ஆகியவை நீரும் .
6 . விதைத்தூள் 50 கிராம் , இந்துப்பு 50 கிராம் , சுக்குத் தூள் 25 கிராம் கலந்து தினம் வேளை 3 கிராம் சாப்பிட்டு வர மலப்போக்குப் பெருகி , யானைக்கால் வீக்கம் குறையும் . மெல்லக்குறையும் . மேலும் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.
7 . இலைச்சாறு , இஞ்சிச் சாறு , தேன் சமன் கலந்து 1 தேக்கரண்டி ( 5 மி.லி. ) கொடுத்துவர உடல் வெப்பம் தணிந்து இரவிலும் , மழைக்காலத்திலும் வரும் மிகு வியர்வை குணமாகும் .
கருத்துகள்
கருத்துரையிடுக