கறிமுள்ளி ( Solanum surrattense Burm.f .; Solanaceae )

 

 கறிமுள்ளி (  Solanum surrattense Burm.f .; Solanaceae )


 சிறகாக உடைந்த முள் நிறைந்த இலைகளையும் , நீலநிறப் பூக்களையும் , வெள்ளை வரியுடைய உருண்டை வடிவக் காய்களையும் , மஞ்சள் நிறப் பழங்களையும் உடைய தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி . இது பப்ரமுள்ளி , பாப்பார முள்ளி என்றப் பெயர்களாலும் குறிப்பிடப் பெறுகிறது . ( இதையே கண்டங்கத்தரியாகக் கொள்வோரும் உளர் . அவ்வாறு கொள்ளுதல் தவறாகும் ) தமிழகமெங்கும் தரிசுகளில் தானே வளர்கிறது . இலை , வேர் , காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை .


 செடி முழுமையாக , சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல் , காமம் பெருக்குதல் ஆகிய குணங்களையுடையது . வேர் கோழையகற்றுதல் , சிறுநீர் , வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல் , நாடி நடை மிகுந்து உடல் வெப்பத்தருதல் ஆகிய குணங்களையுடையது .

 1 . இவைச்சாறு 15 மி.லி. சிறிது தேன் கலந்து 3 வேளையாகக் கொடுத்து வர இரைப்பிருமல் குணப்படும் . சளியகலும் . 

2 . செடியை முழுமையுமாகப் பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்துப் பொடி செய்து சமன் கற்கண்டுப் பொடி கலந்து அரைத் தேக்கரண்டி 1 வேளையாகத் தேனில் கொள்ளக் கோழை , இருமல் , ஈளை , இரைப்பு ஆகியவை தீரும் .

 3 . 100 கிராம் சமூலத்தை 500 மி.லி. நீரிலிட்டு 150 மி.லி யாகக் காய்ச்சி வடித்து 30 மி.லி யாக நாளைக்கு 4 , .5 முறை கொடுத்து வரக் காய்ச்சல் , நீரெரிவு , இருமல் , சிறுநீர்த்தடை ஆகியவை நீங்கும் .

 4 விதையைப் பீடி போல் செய்து புகைப்பிடிக்கப் பற்களிடையே தோன்றும் புழுக்கள் வெளிப்பட்டு வலி நீங்கும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )