காசறை ( Hibicus cannabinus L .; Malvaceae
காசறை ( Hibicus cannabinus L .; Malvaceae )
கைவடிவ பசிய இலைகளையும் சுணையுடைய சிறு கிளைகளையும் , தனித்த மஞ்சள் நிறப் பூக்களையும் , உருண்டை வடிவ விதைகளையும் உடைய சிறுசெடி . புளிச்சக் கீரை என்றும் வழங்கப்பெறும் . இதன் கீரைக்காகத் தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது . இலை , பூ , விதை ஆகியவை மருத்துவப்பயனுடையவை . இலை எரிச்சல் தணித்தல் கொதிப்புத் தணித்தல் காமம்பெருக்கல் ஆகிய மருத்துவப் பண்புகளை உடையது .விதை காமம் பெருக்கும் .
1 . இலையை அரைத்துக் கட்டிகளுக்குப் பற்றுப் போட அவை உடைந்து ஆறும் .
2. பூவைப் பிழிந்தெடுத்த சாறு 10 மி.லியில் ஒரு சிட்டிகை மிளகுப்பொடியும்சர்க்கரையும் கலந்து நாள்தோறும் காலை மாலை பருகி வர சுவையின்மை பித்த வாந்தி ஆகியவை குணமாகும் .
3. 250 கிராம் இளங்காய்களைச் சிதைத்து 2 லிட்டர் நீாவிட்டு அரை லிட்டராகுமாறு காய்ச்சி வடிகட்டி அதில் 1 கிலோ சீனிசேர்த்து தேன்பதமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு 20 மி.லி. சமஅளவு நீரில் கலந்து காலை மாலை சாப்பிட்டுவர செரிமானமின்மை சரியாகும் . பித்தம் தணியும் .
4. கீரையைச் சமைத்து உணவோடு உண்டுவர உடலைத் தேற்றும் .
கருத்துகள்
கருத்துரையிடுக