உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

 உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) 


சிறிய ஓடியக் கூடிய இலைகளை எதிரடுக்கில் கொண்ட மென்மையான சுற்றுக்கொடி , வேலிகளில் தானே வளர்கின்றது . உப்பிலியக் கொடி என்றும் குறிப்பிடப் பெறுகிறது . செடி முழுமையும் மருத்துவப் பயனுடையது . 

  •  காய்ச்சல் போக்கும் , 
  • வயிற்றுப்புளிப்பை அகற்றும்

 குணங்களையுடையது . 

1.இலைகளை வதக்கிப் பிழிந்த சாறு 10-20மி.லி . வரைகாலை மாலை கொடுத்து வரக் குழந்தைகளுக்குக் காணும் மாந்தம் , கழிச்சல் , விடாக் காய்ச்சல் நீங்கும் . 

2 . 100 கிராம் இலையைப் பொடியாக நறுக்கி கால் கிலோ பசு நெய்யில் போட்டு 5 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி 3 மி.லி. ஆகக் காலை மாலை கொடுத்து வர குழந்தைகளுக்கு உண்டாகும் கழிச்சல் , கரம் ஆகியவை நீங்கும் .  

உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae ) 

சுற்றுக் கொடியாகவோ சிறு செடியாகவோ பயிரிடப்பெறும் கருத்தப் பயறு வகை . முழுப் பயறாகவோ , உடைக்கப்பட்டதாகவோ , தோல் நீக்கியதாகவோ கடைகளில் கிடைக்கும் .  இதன் வேர் பகுப்பு ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

 உடலூரமூட்டி பலந்தரவும் , பால் , காமம் பெருக்கவும் உள்ளழல் ஆற்றவும் மருந்தாகப் பயன்படுத்தலாம் .

1 . ஒரு தேக்கரண்டி உழுத்தம்மாவை தேனில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரஉடல் பலம் பெறும் .

 2 தோல் நீக்கிய உழுத்தம் பருப்பு மாவை நீரிலிட்டு பிசைந்து அடையாகச்சுட்டு பொறுக்கக்கூடிய குட்டில் தலையில் வைத்துக் கட்டிவர சுரத்தினால் ஏற்படும் வாய்ப்பிதற்றல் , மயக்கம் , மூர்ச்சை முதலியன தீரும் . 

3 . வேரை மையாய் அரைத்து அனலில் கவிபோல் கிளசி வீக்கங்களில் வைத்துக் கட்டக் குணப்படும் .

 4. 50 கிராம் உழுந்தை ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை கால் விட்டர் அளவாகச் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் : குணமாகும் . 

5 . 50 கிராம் உழுந்தை அரை லிட்டர் நீரிலிட்டு ஓரிரவு ஊரவைத்து அதிகாலை வடிகட்டிப் பருகி வர சிறுநீர்த் தொடர்பான நோய்கள் அகலும் .

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )