அழிஞ்சில் ( Alangium salviifolium ( L.f ) .; Alangiaceae

அழிஞ்சில்( Alangium salviifolium ( L. f ) .; Alangiaceae )












நீண்ட இலைகளையுடைய முள்ளுள்ள மரம் . செம்மஞ்சள் நிறமுள்ள பழங்களையுடையது . தமிழகமெங்கும் புதர்க் காடுகளிலும் வேலிகளிலும் தானே வளர்கிறது . இதில் கறுப்பு , வெள்ளை , சிவப்பு முதலிய இன வேறுபாடு உண்டு . இவற்றில் சிவப்புப் பூ உடைய மரம் மருத்துவப் பயன் மிக்கதாகக் கருதப்படுகிறது . வேர்ப்பட்டை , இலை , விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை . 

நோய் நீக்கி உடல் தேற்றுதல் , வாந்தி உண்டு பண்ணுதல் , பித்த நீர்ச்சுரப்பை மிருத்தல் , மலமிளக்குகல் , வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லுதல் , காய்ச்சல் அகற்றுதல் ஆகிய மருத்துவ குணங்களையுடையது . அழிஞ்சிலில் செய்யப் படும் மருந்துகளைத் தொடர்ச்சியாக 1 வாரத்திற்கு மேல் கொடுப்பின் வாந்தி , வயிற்றுப் போக்கு , வியர்வை ஆகியவை உண்டாகும் . நீடித்துச் சாப்பிட வேண்டுவதாயின் இடையிடையே 1 வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் சாப்பிடலாம் .

 1 . வேர்ப்பட்டையை உலர்த்திப் பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை 1 வாரம் கொடுத்து வரக் கடி விஷங்கள் ( பாம்பு , எலி , வெறிநாய் ) தொழுநோய் , கிரந்தி , புண் , வயிற்றுப் போக்கு ஆகியவை குணமாகும் . 

2 . இலையை அவ குன்மம் , சுப நோய்கள் தீரும் . 1 கிராம் அளவாகக் காலை மாலை கொடுக்கக் கிராணி , குன்மம், கப நோய்கள் தீரும்.

3. சிவப்பு அழிஞ்சில் வேர்ப்பட்டைத் தூள் 100 மில்லி கிராமுடன் கிராம்பு , சாதிக்காய் , சாதிப்பத்திரி ஆகியவை சமன் கலந்த பொடி 200 மில்லி கிராம் கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரத் தொழுநோய் குணமாகும் . 

4 . அழிஞ்சில் விதையிலிருந்து எடுக்கப் பெறும் எண்ணெயை உடம்பில் தடலி வரத் தோல் நோய்கள் குணமாகும் . ஓரிரு துளிகளாக உள்ளுக்கும் கொடுக்கலாம் .

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உப்பிலாங்கொடி ( Pentatropis capensis ( L. ) Bullock .; Asclepiadaceae ) மற்றும்உழுந்து ( Vigna mungo L .; Papilionoideae )

கிரந்தி நாயகம் ( Dipteracanthus patulus ( jacq ) Nees .; Acanthaceae ) மற்றும்கிராம்பு ( Eagenia caryophyllata Thumb .; Myrtaceae )

அத்தி ( Ficus racemosa L .; Moraceae )